
Leprosy Rehabilitation Centre
Thalaivasal
.jpg)
.jpg)
தலைவாசலில் 35-க்கும் அதிகமான தொழு நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையானவர்கள் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள். இதில் பலருக்கு கைகள் அல்லது கால்கள் இல்லாத நிலையிலும், மேலும் சிலருக்கு கண் பார்வை இல்லாத நிலையில் உள்ளனர். வயது மூர்ப்பு மற்றும் உடல் குறைபாடு காரணமாக இவர்களால் அன்றாட வாழ்க்கை செயல்களை செய்வதற்கே பிறருடைய உதவி தேவைப்படுகிறது. இவர்களால் வேலைக்கோ அல்லது பொது இடங்களுக்கோ நம்மை போல் செல்ல முடியாது.
இவர்களுக்கு அரசாங்க உதவியால் தேவையான மருந்துகள் கிடைக்கின்றன, ஆனால் அன்றாட வாழ்விற்கு தேவையான உணவு, துணி மற்றும் மளிகை பொருட்கள் கிடைப்பதில்லை.
Yasagam Foundation மூலம் நாங்கள் மாதம் ஒரு முறை தன்னார்வலர்களின் உதிவியுடன் இவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் துணிகளை வழங்கி வருகிறோம். உங்களால் முடிந்த மளிகை பொருட்களோ, புதிய துணிகளோ அல்லது நல்ல நிலையில் உள்ள பழைய துணிகளை கொடுத்து உதவலாம். இவர்களுக்கு உதவ விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் தொடர்புகொள்க : 86670 41432.
Our Regular Activities
To play, press and hold the enter key. To stop, release the enter key.











