
யாசகம் பவுண்டேசன் பற்றி
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் உலக மக்களில் பலர் உடல் ரீதியாகவும், பணம் ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர். இதில் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளான நபர்கள் யார் என்று பார்த்தால் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற வயதான ஏழை மக்கள். இவர்களில் பலர் ஒருவேளை உணவு கிடைக்காமல் பசியின் பிடியில் துன்பப்பட்டனர்.
நாங்கள் வசிக்கும் பகுதியில் இதுபோல் பசியால் துன்பப்படும் 15 -க்கும் அதிகமான வயதானவர்களை பார்க்க நேர்ந்தது. எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தினமும் இவர்களுக்கு உணவு கொடுத்து வந்தோம். கொரோனா காலம் முடிந்த பிறகும் உணவு வழங்குவதை தொடர்ந்து செய்து வந்தோம்.
காலம் செல்ல செல்ல எங்களிடம் உணவு எதிர்ப்பார்க்கும் ஆதரவற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதே சமயம் எங்களின் இந்த சேவையை பார்த்து, மேலும் சில இளைஞர்கள் எங்களுடன் இணைந்து உணவு வழங்க உதவி செய்தனர். தற்போது நூறு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.
இந்த சேவையின் அடுத்தக்கட்டமாக, எங்கள் பகுதியை சுற்றியுள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகங்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் இல்லங்கள், போன்ற தொண்டு அமைப்புகளுக்கு தேவையான மளிகை பொருட்கள், மருத்துவ பொருட்கள், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தேவையான நாப்கின், முதியவர்களுக்கு தேவையான அடல்ட் டயாபர், இரத்ததானம் மற்றும் நிதி உதவி செய்து வருகிறோம்.
கடந்த நான்கு வருடங்களாக இந்த சேவையை நண்பர்கள் மற்றும் எங்கள் பகுதி இளைஞர்களின் உதவியுடன் செய்து வருகிறோம். கடந்த 2024 ஆம் ஆண்டு எங்கள் அமைப்பிற்கு யாசகம் பவுண்டஷன் (Yasagam Foundation) என பெயர் வைத்து அரசாங்க முறைப்படி பதிவு செய்து, சேவை செய்து வருகிறோம்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
என்னும் குறளின் வழியில், எங்கள் சேவையின் அடுத்த கட்டமாக ஏழை மாணவர்களின் படிப்பிற்கு உதவும் வகையில் இலவச நூலகம் மற்றும் கணினி பயிற்சி மையம் தொடங்க முயற்சி செய்கிறோம்.
இவை அனைத்தும் தன்னார்வலர்களின் ஆதரவாலும், உதவியாலும் சாத்தியப்படும் என்பதை முழுமையாக நம்புகின்றோம்.
யாசகம் பவுண்டேசன் உறுப்பினர்கள்

N.R.Amarnath, MBA.
Founder

S.Saravanan
Asst.Secretary

S.Meganathan, M.E.
Vice President

A.Mohammed Rafi, B.Com.
Treasurer

K.Ramachandran
Secretary

P.Mohanavel, MBA.
Accountant
